உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

சேலம்: காளியம்மன் கோவிலில், பால்குட ஊர்வலம் நடந்தது. சேலம், சஞ்சீவிராயன்பேட்டையில் உள்ள காளியம்மன் கோவிலில், கடந்த, 24ல் பாலிகை போடுதல் நிகழ்ச்சியுடன் ஆடி திருவிழா தொடங்கியது. 25ல் பூச்சாட்டுதல் விழா நடந்தது. 26, 27, 28, 29ல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. நேற்று, பால்குட ஊர்வலம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமிக்கு, ஊர்வலமாக பால்குடங்குகளை எடுத்து வந்தனர். பின், சிறப்பு அபி ?ஷக ஆராதனை நடந்தது. இன்று, கொடியேற்று விழா நடக்கிறது. தொடர்ந்து, ஆக., 13 வரை சிறப்பு பூஜை, அபி?ஷக ஆராதனை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !