உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் இரண்டாம் வின்ச் சிறப்பு பூஜையுடன் இயக்கம்

பழநியில் இரண்டாம் வின்ச் சிறப்பு பூஜையுடன் இயக்கம்

பழநி, பழநி முருகன்கோவில் இரண்டாம் ’வின்ச்’ பராமரிப்பு பணிகள் முடிந்து, சிறப்பு பூஜையுடன் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. பழநி மலைக்கோயிலுக்கு எளிதாக செல்லும் வகையில் நாள்தோறும் மூன்று ’வின்ச்’கள் இயங்குகின்றன. இதில் இரண்டாம் வின்ச் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. அதன்பெட்டிகள் புதுப்பிக்கப் பட்டு, சோதனை ஓட்டத்திற்குபின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று காலையில் சிறப்புபூஜை செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் செல்வராஜ், துணைஆணையர் (பொ) மேனகா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். விரைவில் ஒன்று, மூன்றாம் ’வின்ச்’களிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !