முத்துமாரியம்மன் கோயில் விழா
ADDED :3163 days ago
திருவாடானை, திருவாடானை சிநேகவல்லிபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், பால்,பறவை,வேல் காவடிகள் எடுத்தும் பூக்குழி இறங்கினர். இரவில் கலைநிகழ்ச்சிகளும், அலங்கரிக்கபட்ட தேரில் அம்மன் வீதி உலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.