திருநெல்வேலி கனக மகாலட்சுமி கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு
ADDED :2993 days ago
திருநெல்வேலி: நெல்லை கெட்வெல் கனகமகாலட்சுமி கோயிலில் அம்மனுக்கு ஒரு லட்சத்து 8 வளையல்கள் அணிவித்து பூஜைகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலி ஜங்ஷனில் தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள கெட்வெல் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள கனகமகாலட்சுமிக்கு வரலட்சுமிவிரதத்தையொட்டி வளைகாப்பு வைபவம் நடந்தது. இதில் அம்மனுக்கு ஒரு லட்சத்து 8 வளையல்கள் அணிவித்து பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமிவிரதத்தை பெண்கள் மேற்கொள்கின்றனர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். கனகமகாலட்சுமி கோயிலிலும் விரதம் இருந்த பெண்கள் திரளாக கலந்துகொண்டனர். பங்கேற்ற பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.