திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில்1,008 கலசாபிஷேக விழா
ADDED :3090 days ago
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில்,1,008 கலசாபிஷேக பெருவிழா கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 9ம் ஆண்டு ஆடி மாதம், வரலட்சுமி விரதத்தை ஒட்டி, திரிபுர சுந்தரி அம்மனுக்கு, 1,008 கலசாபிஷேக பெருவிழா, வேதமலை வல பெருவிழா குழு தலைவர் துரை, செயலர் அன்புச்செழியன் ஏற்பாட்டில் கோலாகலமாக நடந்தது.இதற்காக, யாக குண்டம்அமைத்து, காலை, 8:00 மணிக்கு விநாயகர் பிரார்த்தனையுடன் வேள்விகள் துவங்கின. 10:00 மணிக்கு, 1,008 கலசங்களில், அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது.சக்ரா பட்டுப்புடவைசாற்றுதல் மற்றும் வீணை இசையும் நடைபெற்றது.