உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன்கோவிலில் ஆடித்திருவிழா

முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன்கோவிலில் ஆடித்திருவிழா

முத்தியால்பேட்டை:முத்தியால்பேட்டை ஸ்ரீமூலஸ்தம்மன் கோவிலில், 17வது ஆண்டு ஆடித் திருவிழா,  கோலாகலமாக நடைபெற உள்ளது.முத்தியால்பேட்டை கிராமம், கீழத் தெருவில், ஸ்ரீமூலஸ்தம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மூன்றாவது வாரத்தில், ஆடித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.நடப்பாண்டு, 17வது ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு, கசத்துமேடு பகுதியில், அம்மன் அலங்கார ஊர்வலம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி  நடந்தது.இரண்டாவது நாளான, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற உள்ளன.மூன்றாவது நாளான, காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜை, பகல், 2:00 மணிக்கு கூழ் வார்த்தல் நடைபெற உள்ளது.

இரவு 8:00 மணிக்கு, மூலஸ்தம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலா வர உள்ளார். முன்னதாக, சிறப்பு வாண வேடிக்கையும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை, முத்தியால்பேட்டை வாழ், முனி நாயக்கரின் பேரன், ஆர்.வி.,ரஞ்சித்குமார் குடும்பத்தினர் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !