மதுராந்தகம் செல்லியம்மன் திருத்தேர் உலா கோலாகலம்
ADDED :3090 days ago
மதுராந்தகம்:மதுராந்தகம் செல்லியம்மன் கோவில் ஆடி உற்சவத்தை முன்னிட்டு, திருத்தேர் வீதியுலா நடைபெற்றது.மதுராந்தகத்தில் எழுந்தருளியுள்ள சேற்றுக்கால் பிடாரி செல்லியம்மன் திருக்கோவிலில் ஆடி உற்சவம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
நான்கு நாள் உற்சவத்தில், ஊரணிப் பொங்கல் அம்மன் வீதியுலா என, களைகட்டியது. அதை தொடர்ந்து திருத்தேர் பவனி நடைபெற்றது.செல்லியம்மன் சர்வ அலங்காரத்துடன் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், உற்சவத்தில் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். மஞ்சள் நீராட்டும் சிறப்பாக நடந்தேறியது.