உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமகிரிப்பேட்டை மழை வேண்டி கூட்டு வழிபாடு

நாமகிரிப்பேட்டை மழை வேண்டி கூட்டு வழிபாடு

நாமகிரிப்பேட்டை: மழை வேண்டி, அனைத்து மதத்தினர் சார்பில், காக்காவேரியில் கூட்டு வழிபாடு நடந்தது. ராசிபுரம் தாலுகாவில், போதுமான மழை பெய்யாததால், கடும் வறட்சி நிலவி வருகிறது. காக்காவேரி ஊராட்சியில், அனைத்து மதத்தினர் சார்பில், மழைவேண்டி கூட்டு வழிபாடு நடந்தது. முன்னதாக, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து நடந்த கூட்டத்திற்கு லீமாரோஸ் வரவேற்றார். ஊள்ளூர் பிரமுகர்களான காளியப்பன், வனிதா செங்கோட்டையன், ஸ்டீபன் சொரூபன், தனபால், பொம்மன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். பேராசிரியர் லியோ சார்லஸ் பேசினார். தொடர்ந்து, கூட்டு வழிபாடு நடந்தது. முடிவில் மழைத்தொட்டி கூழ் அனைவருக்கும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !