தாண்டிக்குடி அம்மனுக்கு கவசம் சாத்துதல்
ADDED :3007 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகே உள்ள ஆடலூர் முத்தாலம்மன், காளியம்மன் சுவாமிகளுக்கு வெள்ளி கவசம் பூட்டும் விழா நடந்தது.
விழாவில் சுவாமிக்கு வெள்ளியிலான கவசம் மற்றும் உருவாரம் சாத்தப்பட்டது. வரலட்சுமி விரதம் இருந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. கவசம் சாத்தப்பட்ட நிலையில் அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.