உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை அழகர்கோவில் கள்ளழகர் ஆடித்தேரோட்டம் கோலாகலம்

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் ஆடித்தேரோட்டம் கோலாகலம்

மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் திருவிழா ஜுலை 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடித் தேரோட்டம் இன்று (ஆக., 7ல்) காலை 8 மணிக்கு மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.  தேரோட்டத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !