உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கக்காசு தந்த சாஸ்தா

தங்கக்காசு தந்த சாஸ்தா

திருநெல்வேலி ஜங்ஷன் அருகே அமைந்துள்ளது படிக்காசு தந்த சாஸ்தா கோயில். பல நூறு ஆண்டுகளுக்கு முன் அப்பகுதி மழை பொய்த்து வறண்டு கிடந்தது. உணவிற்கே வழியின்றி மக்கள் பஞ்சத்தில் இருந்தனர். ஆனால் அதில் ஒரு இளைஞன் மட்டும் பக்தியுடன் இருந்தான். தினமும் சுவாமிக்கு இயன்ற அளவு நிவேதனம் செய்து வந்தான். அப்போது அவனது கனவில் சாஸ்தா தோன்றி தினமும் படியில் ஒரு தங்கக்காசு வழங்குவதாகவும், அதைக் கொண்டு நிவேதனம் செய்து அந்த பிரசாதத்தை மற்றவர்களுக்கு வழங்குமாறு கூறி மறைந்தார். அடுத்த நாள் காலை கனவில் கூறிய படியே கோயில் படியில் ஒரு தங்கக்காசு இருந்தது. அன்றிலிருந்து இந்த சாஸ்தா தங்கக்காசு தந்த சாஸ்தா என்றே அழைக்கப்படுகிறார். தன்னை நாடி வருவோரின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்துக் கொண்டிருக்கிறார். எரிச்சமுடையார் சாஸ்தா, சடையுடையார் சாஸ்தா என்றெல்லாம் அழைக்கப்பட்ட இத்தலத்து சாஸ்தாவுக்கு படிக்காசு தந்த சாஸ்தா என்ற பெயரே இப்போது பிரபலமாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !