உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காய்கறி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

காய்கறி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு

ஆட்டையாம்பட்டி: காய்கறி அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், செங்குந்தர் மாரியம்மன் கோவிலில், கடந்த, 26ல், பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. நேற்று, தக்காளி, வெண்டைக்காய், முள்ளங்கி, வாழைக்காய், கத்தரி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றால், மூலவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இன்று காலை, சக்தி அழைத்தல், இரவு பொங்கல் வைத்தல், மாவிளக்கு மற்றும் சத்தாபரணம் நடக்க உள்ளது. நாளை, பூங்கரகம், அக்னி கரக ஊர்வலம், கூழ் படைத்தல் நடக்கிறது. ஆக., 10 இரவு, வண்டி வேடிக்கை, கம்பம் எடுத்தல், 11ல் பூந்தேர் ஊர்வலம், ஆக., 12ல் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !