உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் 1,008 தீர்த்தக்குட ஊர்வலம்

கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் 1,008 தீர்த்தக்குட ஊர்வலம்

தாரமங்கலம்: கண்ணனூர் மாரியம்மன் கோவிலில், 1,008 தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. ஆடிப்பெருவிழா, தாரமங்கலம், கண்ணனூர் மாரியம்மன் கோவிலில், கடந்த, 20ல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. நேற்று, 1,008 தீர்த்தக் குடங்களுடன், வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக, பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் சென்று, அங்கு நடந்த அபிஷேகத்தில், சுவாமி தரிசனம் செய்தனர். நாளை, அக்னி பிரவேசம் செய்தல், மாவிளக்கு ஊர்வலம் ஆகியவை நடக்கிறது.

* சேலம், நெத்திமேடு, மணியனூர், காந்திநகர் சக்தி மாரியம்மன் கோவிலில், கடந்த, 16ல், முகூர்த்தகால் நடுதல் நிகழ்ச்சியுடன் ஆடிப்பண்டிகை விழா தொடங்கியது. நேற்று, பால்குட ஊர்வலம் நடந்தது. செவ்வாடை பக்தைகள் பலர், பால்குடம் சுமந்து ஊர்வலம் வந்தனர். கோவில் வளாகத்தில் காலை, 8:15 மணிக்கு தொடங்கிய ஊர்வலம், 11:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்து, வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !