மாரியம்மன் கோவிலில் சக்தி அழைப்பு உற்சவம்
ADDED :3041 days ago
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில் சக்தி அழைப்பு உற்சவம் நடந்தது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், கடந்த, 25ல் பூச்சாட்டுதல் விழாவுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. நேற்று இரவு சக்தி அழைப்பு நடந்தது. இதையொட்டி, கிச்சிப்பாளையத்தில் காளியம்மன் சிலை வடிவமைத்து, அங்கிருந்து ஊர்வலம் எடுத்துவரப்பட்டது. அதில், 200 க்கும் மேற்பட்டோர், தேங்காய், பழம், பூக்கள் அடங்கிய சீர்வரிசை தட்டு கொண்டுவந்தனர். பின், கோட்டை மாரியம்மன் கோவிலில், சிலை வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டுச்சென்றனர். சந்திர கிரகணத்தின்போது, அனைத்து கோவில்களிலும், மாலை, 6:00 மணிக்கு நடை சாத்தப்பட்ட நிலையில், கோட்டை மாரியம்மன் கோவிலில் மட்டும் விழா நடந்தது.