உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பர்கூரில் கோவில் திருவிழா: பூக்கரகம் எடுத்து வழிபாடு

பர்கூரில் கோவில் திருவிழா: பூக்கரகம் எடுத்து வழிபாடு

கிருஷ்ணகிரி: பர்கூர் அங்காள பரமேஸ்வரி மற்றும் நாகலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பூக்கரகம் எடுத்து வழிபட்டனர். பர்கூர் போலீஸ் குடியிருப்பில் உள்ள அங்காள பரமேஸ்வரி, நாகலம்மன் கோவில், 15ம் ஆண்டு திருவிழா, கடந்த, 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 6 காலை, விநாயகருக்கு பொங்கல் வைத்து, அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பால்குட ஊர்வலம், பூக்கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பூங்கரகம் எடுத்து வந்து வழிபட்டனர். இன்று மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !