உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணம்: கோவில்களில் நடையடைப்பு

சந்திர கிரகணம்: கோவில்களில் நடையடைப்பு

ஈரோடு: சந்திர கிரகணத்தை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில், அனைத்து கோவில்களிலும் நேற்று நடை அடைக்கப்பட்டன. சந்திர கிரகணம், நேற்றிஇரவு, 10:53 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு, 12:48க்கு முடிந்தது. கிரகணம் தொடங்கும் ஆறு மணி நேரத்துக்கு முன், கோவில்கள் நடை அடைக்கப்பட வேண்டும். இதன்படி ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி ரங்கநாதர் கோவில், பெரிய மாரியம்மன் சின்ன மாரியம்மன், கொங்காலம்மன், வலசு மாரியம்மன், சத்திரம் மாரியம்மன், கருங்கல்பாளையம் மாரியம்மன், பூங்கா ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் நடை அடைக்கபட்டன. அதிகாலையில் கோவில்கள் சுத்தப்படுத்தப்பட்டு, வழக்கம்போல் பூஜைகள் நடந்தன.

சந்திர கிரகணத்தால், ரோகிணி, அஸ்தம், உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரம் மற்றும் திங்கள்கிழமைகளில் பிறந்தவர்கள், இன்று கிரகண பரிகாரம் செய்யவேண்டும். சந்திரனுக்கு, அரை கிலோ பச்சரிசி, மல்லிகை பூ, நெய் தீபம் ஏற்றியும், கேதுவுக்கு, கொள்ளு, நெய் தீபம் ஏற்றியும், சிவப்பு அரளியில் அர்ச்சனை செய்தும், வழிபாடு செய்ய வேண்டும். பரிகாரம் முடித்த பின் உணவருந்த வேண்டியது அவசியம் என, சிவாச்சாரியர்கள் தெரிவித்தனர்.

* இதேபோல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஷ்வரர் கோவில், சென்னிமலை முருகன் கோவில் என அனைத்து கோவில்களிலும் நடை அடைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !