உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கிரகண அபிஷேகம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கிரகண அபிஷேகம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சந்திர கிரகணம் முடிந்த பின்பு சுவாமிக்கு கிரகண அபிஷேகம் நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, நேற்று பகல் ஒரு மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. அதன் பின்பு மாலை 6:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. இரவு 11:00 மணிக்கு தீர்த்தவாரிக்காக ரிஷப வாகனத்தில் சுவாமி சந்திரசேகர், கவுரி அம்பாள் எழுந்தருளி புறப்பாடாகியது. இரவு 11:45 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. பின் சுவாமி வீதியுலா நடந்தது. 12:50 மணிக்கு சுவாமி கோயிலை வந்தடைந்தார். அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு கிரகண அபிஷேகம் நடந்தது. பின் அர்த்தஜாம பூஜை, பள்ளியறை நடந்தது. அதிகாலை 2:30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !