உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரியில் ஆடிப்பொங்கல் விழா

சிங்கம்புணரியில் ஆடிப்பொங்கல் விழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் ஆடிப்பொங்கல் விழாவையொட்டி ஒரே இடத்தில் நுாறு கிடா, ஆயிரம் கோழிகள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இங்குள்ள பழமையான வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆடிசெவ்வாய் அன்று ஆடிப்பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இன்று (ஆக 8 ல்) இந்த விழா கிராம மக்களால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கோயில் திடலுக்கு வந்து ஆடு, கோழிகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பலியிட்டனர்.

பின்னர் அந்த இடத்திலேயே பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதில் நுாறுக்கும் மேற்பட்ட ஆடுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும் பலியிடப்பட்டன. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் அ.காளாப்பூர், கல்லம்பட்டி, கரடிபட்டி, மூவன்பட்டி, முறையூர், சூரக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இந்த ஆடிப் பொங்கலையொட்டி இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கறிவிருந்து நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !