கெங்கையம்மன் கோயில் தேர் திருவிழா: மீனவர்கள் வடம் பிடித்தனர்
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே இரண்டு பக்கம் கடலாலும், இரண்டு பக்கம் ஆறுகளாலும் சூழப்பட்ட தீவுக் கிராமமான கொடியம்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் கடற்கரை ஓரத்தில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. மீனவர்களின் குலதெய்வமான கெங்கையம்மன் கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாவான, தேர் திருவிழா நேற்று மதியம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான மீனவர்கள் தேரை வடம் பிடித்து, கடற்கரை மணலில் இழுத்து சென்றனர். தேர் நான்குவீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்த து. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.