உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி திருவிளக்கு பூஜை

மழை வேண்டி திருவிளக்கு பூஜை

குளித்தலை: குளித்தலை அடுத்த, வெள்ளப்பட்டியில் பொதுமக்கள் சார்பில், மாரியம்மன் கோவிலில், 1,350 திருவிளக்கு பூஜை நடந்தது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் பொதுஅமைதி மற்றும் மழை வேண்டுதல் நிறைவேறக்கோரி, பெண்கள் திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று, மூன்று கட்டமாக திருவிளக்கு பூஜை நடந்தது. குங்குமம், துளசி, மலர், மஞ்சள், தானியம் போன்ற பொருட்களை தூவி பெண்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். தொடர்ந்து, மாரியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் வழங்கல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. தோகைமலை சுற்றியுள்ள, ஐந்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !