உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோவில் சார்பில் திருவையாறில் வருண ஜபம்

திருப்பதி கோவில் சார்பில் திருவையாறில் வருண ஜபம்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருவையாறு, அய்யாரப்பர் கோவிலில், மூன்று நாள் வருண ஜபம் துவங்கியது. தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் செழிக்கவும், காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடவும், திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருவையாறு அய்யாரப்பர் கோவிலில், மூன்று நாட்கள் வருண ஜபம், நேற்று முன்தினம் துவங்கியது. திருமலை திருப்பதி தேவஸ்தான மேற்பார்வையாளர், ஸ்ரீனிவாச கனபாடிகள் தலைமையில், 12 பேர் குழு, தினமும், ஆறு மணி நேரம், இந்த வருண ஜபத்தில் ஈடுபட்டு வருகிறது.

இது குறித்து, தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: சில ஆண்டுகளாக, போதிய அளவு பருவ மழை பெய்யாததால், காவிரி வறண்டுள்ளது. அதனால், டெல்டா மாவட்டங்களில், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையிலும், உலக நன்மைக்காகவும், இந்த வருண ஜபம் நடத்தப்படுகிறது. இந்த ஜபத்தை, மாதந்தோறும் நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !