ராகவேந்திரா சுவாமிகளின் 346வது மஹோத்ஸவம்
ADDED :2988 days ago
ஈரோடு: ராகவேந்திரா சுவாமிகளின், 346வது ஆராதன மஹோத்ஸவம், அக்ரஹாரம் வீதியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீபாதராஜ மடத்தில், நேற்று நடந்தது. இதையொட்டி நிர்மால்ய விஸர்ஜனம், சேவா சங்கல்பம், பாத பூஜா, பல்லக்கு உத்ஸவம், ரதோற்ஸவம், கனகாபிஷேகம், மஹா தீபாராதனை உள்ளிட்டவை நடந்தன. ஸ்ரீராகவேந்திர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக ஸ்ரீ ஸ்ரீனிவாச திருக்கல்யாண உத்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.