உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடித்திருவிழாவை முன்னிட்டு தீ மிதி விழா கோலாகலம்

ஆடித்திருவிழாவை முன்னிட்டு தீ மிதி விழா கோலாகலம்

இடைப்பாடி: ஆடித்திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று தீ மிதி விழா நடந்தது. சேலம், சீலநாயக்கன்பட்டி அடுத்த, சஞ்சீவிராயன்பேட்டையில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, கடந்த, 25ல் பூச்சாட்டுதல் விழாவுடன் தொடங்கியது. நேற்று, தீ மிதி விழா நடந்தது. கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த திடலை சுற்றி, பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. அதில், தங்கள் பிரார்த்தனைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி, 500க்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர். இதையொட்டி, மாரியம்மன், காளியம்மனுக்கு, அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

* இடைப்பாடியில் உள்ள மேட்டுத்தெரு, க.புதூர், ஆலச்சம்பாளையம், வெள்ளாண்டிவலசு ஆகிய பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த வாரம், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று நடந்த தீ மிதி விழாவில், 4,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.

* ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில், காலை முதல் மாலை வரை, ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பூங்கரகம், தீச்சட்டிகளை ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலம் வந்து, அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !