உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்து அரசி அம்மன் கோயிலில் முள் படுக்கையில் நடந்து பக்தர்கள் நேர்த்தி கடன்

பட்டத்து அரசி அம்மன் கோயிலில் முள் படுக்கையில் நடந்து பக்தர்கள் நேர்த்தி கடன்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மறவர்பெருங்குடியில், ராஜ கம்பள நாயக்கர்களுக்கு பாத்தியப்பட்ட, பட்டத்து அரசி அம்மன் கோயில் உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி பொங்கல் விழா 3 நாட்கள் கோலாகலமாக நடக்கும்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் விழா நடந்தது.  பக்தர்கள் விரதமிருந்து  பொம்மை செய்தல், அக்னி சட்டி எடுத்து வலம் வந்தனர். அதிகாலையில், பெண்கள் பக்தியுடன் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர்.  பட்டத்து அரசி அம்மனுக்கு இலந்தை முள் உகந்தது என்ற ஐதீகத்தால்,  கோயில் அருகில் இலந்தை முட்களால் ஆன படுக்கை அமைத்து அதில், கோயில் பூசாரி மற்றும் முக்கிய பிரமுகர்கள் விரதம் இருந்து, பக்தியுடன் முள் படுக்கையில் நடந்து செல்வர். இந்த கோயிலின் விசேஷமான நிகழ்ச்சியாகும். விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !