உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை யாகபூஜை

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை யாகபூஜை

பழநி: ஆடி லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு யாகபூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா ஜூலை 17ம் தேதி துவங்கியது. ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, இக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நுாறாயிரம் மலர்கள் துாவி, லட்சார்ச்சனை துவங்கியது. ஆக.,10ல் லட்சார்ச்சனை பூர்த்தி விழாவும், இன்று(ஆக.,11ல்) பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, லட்சார்ச்சனை சிறப்பு யாக பூஜையும் நடைபெற்றது.இணை ஆணையர் செல்வராஜ், துணைஆணையர் மேனகா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !