உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பூஜை

தர்மபுரி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பூஜை

தர்மபுரி: ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில், அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. நெசவாளர் காலனி சக்திமாரியம்மன் கோவிலில் உள்ள, துர்கை அம்மனுக்கு நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை, 11:00 மணிக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், தேன் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. மதியம், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செந்தில்நகர் புற்றுமாரியம்மன் கோவிலில், திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று, புற்றில் பால் ஊற்றி, வழிபட்டனர். இதேபோல், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், வெளிபேட்டைதெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி.,ரோடு, அங்காளம்மன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அப்பாவுநகர் ஓம்சக்தி அம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !