உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குகை பெரிய மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

குகை பெரிய மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், குகை பெரிய மாரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை அக்களாபுரத்தில் அமைந்துள்ள, குகை பெரியமாரியம்மன் கோவில், ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி கலச பூஜை, நவக்கிரஹ பூஜை, அம்பாள் கலச பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. தொடர்ந்து கலச புறப்பாடு, அம்பாள் கலச அபிஷேகம் நடந்தது. பெரிய மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையில், ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !