அய்யனார் கோயிலில் ஆடி வெள்ளி
ADDED :2978 days ago
வேடசந்துார், வேடசந்துார் அய்யனார் கோவிலில் துர்க்கையம்மனுக்கு, கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பால், நெய், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களுடன், 108 சங்கு அபிஷேகமும் நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு காலையில் கேப்பைகூழ் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.