கோத்தகிரியில் ஆடிப்பூர ஊர்வலம் பக்தர்கள் பங்கேற்பு
ADDED :2974 days ago
கோத்தகிரி : கோத்தகிரியில் மேல் மருவத்துார் ஆதி பராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், ஆடிப்பூர விழாவை ஒட்டி, செவ்வாடை பக்தர்களின் ஊர்வலம் நடந்தது. கோத்தகிரி டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம் வழியாக, கடைவீதி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில், ஓம் சக்தி, பரா சக்தி கோஷங்கள் முழங்க, குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட, பலர் பங்கேற்றனர். கோத்தகிரி மாரியம்மன் கோவிலில், கஞ்சி வார்ப்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை வழிப்பட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.