காளஹஸ்தியில் காணிக்கை ரூ.57.80 லட்சம்
ADDED :3314 days ago
நகரி: வாயுலிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில், 57.80 லட்சம் ரூபாய் ரொக்கம், 228 கிலோ வெள்ளியை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காளஹஸ்தி, வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 15 நாட்களில், கோவில் உண்டியல்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை, கோவில் அதிகாரி பிரம்மரம்பா முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில், 57,80 லட்சம் ரூபாய், 228 கிலோ வெள்ளி மற்றும் 81 நோட்டு வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.