குன்னுார் பால முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :1 hours ago
குன்னூர்: குன்னுார் அருகே, வெலிங்டன் பால முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது. குன்னுார் வெலிங்டன் பால முருகன் கோவிலில், நேற்று முன்தினம் கிருத்திகை பூஜை சிறப்பாக நடந்தது. விழாவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. மல்லிகை பூ அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை, அர்ச்சகர் டாக்டர் சுப்ரமணியம் தலைமையில், முருக பக்தர்கள் செய்திருந்தனர்.