உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமேட்டில் கஞ்சிக்கலய ஊர்வலம்

பாலமேட்டில் கஞ்சிக்கலய ஊர்வலம்

பாலமேட்டில் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மை, உலக சமாதானம்,
மழைபெய்ய வேண்டி கஞ்சிக்கலயம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

ஆதிபராசக்தி கோயில், ஆடிப்பூர விழா, சக்தி பீட வருடாபிஷேகத்திற்கு மாவட்ட ஆதிபராசக்தி
வார வழிபாட்டு மன்ற தலைவர் அசோகன் தலைமை வகித்தார். மன்றக் கொடியை பேரூராட்சி
முன்னாள் துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் ஏற்றினார். தென் மண்டல பொறுப்பாளர் நாகன், துணைத்தலைவர் சரோஜா, ராஜமார்த்தாண்டன் முன்னிலை வகித்தனர்.

அலங்காநல்லூர் ஒன்றியகுழு முன்னாள் துணைத் தலைவர் முத்துமாரி துவக்கி வைத்தார்.
சடாச்சரபாண்டி, பத்மநாபன், காளிதாஸ், பாஸ்கரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். சோமசுந்
தரம் சொற்பொழிவு நிகழ்த்தினார். செயலர் மணிமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !