ராமநாதபுரம் கலச விளக்கு வேள்வி பூஜை கஞ்சி கலய ஊர்வலம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின்
சார்பில் கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
ஆர்.ஆர்.சேதுபதி நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலசவிளக்கு வேள்வி பூஜை நேற்று முன் தினம் துவங்கியது. வேள்விக்குழு தலைவி சாந்தி தனபால் தலைமை வகித்தார். வழிபாட்டு மன்ற தலைவி நித்யகல்யாணி, மன்ற செயலாளர் பவானி, பொருளாளர் பஞ்சவர்ணம், முன்னாள் வேள்விக்குழு தலைவி பாகம்பிரியாள் முன்னிலை வகித்தனர்.
கஞ்சிவார்ப்பு நிகழ்ச்சியில் ராணி லெட்சுமி குமரன் சேதுபதி, முன்னாள் நகர் மன்ற தலைவி லலிதகலா, எக்ஸ்னோரா தலைவர் ஜெகன்பாபு, நிர்வாகக்குழுத்தலைவர் எம்.சுப்பிரமணியன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கஞ்சி கலய ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் முக்கிய வீதிகள் வழியாக சென்ற கஞ்சி கலய ஊர்வலம் மீண்டும் ஆர்.ஆர்.நகர் வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.