உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அன்னதான திட்டம் ரூ.13.64 லட்சம், பிக்சட் டிபாசிட்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அன்னதான திட்டம் ரூ.13.64 லட்சம், பிக்சட் டிபாசிட்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், அன்னதான திட்டத்திற்கு, 13 லட்சத்து, 64
ஆயிரம் ரூபாய், நிரந்தர வைப்புத் தொகையாக, வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, 1,389
கோவில்களில், 30க்கும் மேற்பட்ட கோவில்களில், நித்திய அன்னதான திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.

இதில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 2005, நவம்பர் 6ல், அன்னதான திட்டம்
துவக்கப்பட்டு, தினமும், 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.அன்னதான சேவை திட்டத்திற்கு பக்தர்கள், நன்கொடையாளர்கள் என, 74 உபயதாரர்கள், இதுவரை, 13 லட்சத்து, 64 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.

இத்தொகை வங்கியில், நிரந்தர முதலீடு செய்து, அதில் வரும் வட்டி, அன்னதான திட்ட
உண்டில் மற்றும் கோவில் நிதி மூலம், அன்னதான திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது
என, கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !