உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

உடுமலை கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

உடுமலை : உடுமலை, நவநீத கிருஷ்ணன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணருக்குசிறப்பு அபிஷேக பூஜை செய்யப்பட்டன.

பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாள், கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று வீடுகளில் வாசலில் இருந்து பூஜையறை வரைக்கும், அரிசி மாவினால் பாதம் வரைந்து கிருஷ்ணரை அழைத்து வழிபடுவர். கிருஷ்ணருக்கு பிடித்த நெய், வெண்ணை, பொங்கல் உட்பட பல்வேறு பதார்த்தங்கள் செய்து நைவேத்யம் செய்யப்படும்.
நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உடுமலை சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடந்தன.

நவநீத கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணருக்கு பால், நெய், தேன் உட்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பகவான் கிருஷ்ணன், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !