காஞ்சிபுரம் பஜனை கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED :2972 days ago
காஞ்சிபுரம்: வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா, பஜனை கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை, நடுத்தெருவில், வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா பஜனை கோவில் உள்ளது. இக்கோவிலில், 34ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.ஸ்ரீதேவி, பூதேவியருடன் வெங்கடேச பெருமாள் வீதியுலா வந்தார். பின், ஊஞ்சல்சேவையும், இரவு உறியடி உற்சவமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கத்ரி இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.