உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

காஞ்சிபுரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சி கலயம் மற்றும் பால் குடம் ஊர்வலம்  நடந்தது.

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இருந்து, கஞ்சி கலயம் மற்றும் பால் குடத்தை சுமந்து, பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள் பங்கேற்றனர்.காலை, 11:30 மணிக்கு தாமல்வார் ஆதிபராசக்தி கோவிலில், ஊர்வலம் நிறைவு பெற்றது. அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம், கூழ் வார்த்தல் நடந்தது. உலக மக்கள் நலன், மழை வேண்டி மத நல்லிணக்கத்திற்காக கலச விளக்கு பூஜையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !