உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி கார்த்திகை வழிபாடு

சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி கார்த்திகை வழிபாடு

ஆண்டிபட்டி:  ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் ஆடி கார்த்திகை வழிபாட்டு விழா நடந்தது. டி.சுப்புலாபுரம் கந்தநாதர் கோயில், மாணிக்க சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாவூற்று வேலப்பர் கோயிலில் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பக்தர்கள் சார்பில் சிறப்பு பூஜை  நடந்தது. சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை வழிபாட்டு மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முருகனின் பெருமை என்ற தலைப்பில் ஆசிரியர் செந்தில் குமார்  சொற்பொழிவு நிகழ்த்தினார். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !