மதுரா முறைப்படி மதுரை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
மதுரை: கிருஷ்ணரின் அவதார திருநாளான கிருஷ்ண ஜெயந்தி விழா, (15ம் தேதி)மணிநகரம் இஸ்கான் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி கோயிலில் சிறப்புடன் நடைபெற்றது.
மதுரா நகர முறைப்படி, அதிகாலை முதல் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடந்தன. விழாவினை இஸ்கான் மதுரை கிளைத் தலைவர் திரு. சங்கதாரி பிரபு அவர்கள் துவக்கி வைத்தார். விழாவின் சிறப்பம்சமாக ஸ்ரீஸ்ரீராதா மதுராபதிக்கு புதிய வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக சுவாமி சன்னதி முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து பக்தர்களின் ஹரிநாமசங்கீர்த்தனமும், கிருஷ்ணரை புகழ்படுத்தும் நாமகீர்த்தனங்களும் நடைபெற்றன. முக்கியமாக ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே என்ற மஹாமந்திரத்தை 108முறை உச்சரித்து பக்தர்கள் பகவானை பக்தியுடன் வணங்கி தரிசனம் செய்தனர். விழாவினையொட்டி அமைக்கப்பட்டிருந்த புத்தக ஸ்டால்களில் சுவாமி ஸ்ரீலபரபுபாதா எழுதிய ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய புத்தகங்கள் குறைந்த நன்கொடையில் வழங்கப்பட்டன. தவிர ஜபயோகா செய்வதற்கான ஜபமாலைகளும் இதில் இடம்பெற்றிருந்தன. தரிசனம் செய்த அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ணரின் பரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு வரை, கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்து பகவானை தரிசித்தனர். அனைவருக்கும் விரத பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
-இஸ்கான் கோயில், மணிநகரம், மதுரை
போன்: 0452-2346472, 7639954301