எங்கே என் துவாரகைநாதன்
ADDED :2967 days ago
கண்ணன் அரசராக வீற்றிருக்கும் தலம் துவாரகை. இங்கு துவாரகாநாத்ஜி என்ற பெயரில் அருள்கிறார். இவர் மீது எல்லை இல்லாத பக்தி கொண்டவள் மீரா. போஜராஜனைத் திருமணம் செய்த பின்னும், அவளது கிருஷ்ணபக்தி கொஞ்சமும் குறையவில்லை. பைத்தியம் போல் கிரு ஷ்ணனையே நினைத்து பாடிக் கொண்டிருந்தாள். இதனால் கோபமடைந்த மன்னன், மீராவை விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சித்தான். அப்போது துவாரகை கண்ணனின் சந்நிதி தானாகவே தாழிட்டுக் கொண்டது. கொளுத்தும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் பாலைவனத்தில் நடந்த அவள், எங்கே என் துவாரகை நாதன் என்று பாடியபடியே வந்தாள். மீராவின் குரலைக் கேட்டு துவாரகைநாதன் மெய்சிலிர்த்தான். அவளது பாதங்கள் ÷ காயில் வாசலை தொட்டதும், பூட்டிய கதவுகள் திறந்தன. கருவறைக்குள் நுழைந்தவள் கண்ணனை ஆரத் தழுவியபடியே அவருடன் கலந்தாள்.