உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிராமேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக பூஜை

அபிராமேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக பூஜை

விழுப்புரம்: திருவாமாத்துார் முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வர பெருமாள் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. விழுப்புரம் அடுத்த திருவாமாத்துார் அபிராமேஸ்வர பெருமாள் கோவிலில், மழை மற்றும் உலக நன்மை வேண்டி, நேற்று முன்தினம் மாலை, 108 திருவிளக்கு பூஜை, தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. குடும்ப நன்மை, கல்வி, தொழில் மேன்மை பெறவும், வறுமை, திருமணம் தடை நீங்கவும் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். முன்னதாக, அபிராமேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, அரிமா சங்கம் குபேரன், ரோட்டரி நிர்வாகிகள் குணசேகரன், பாண்டுரங்கன், ஆய்வாளர் செல்வராஜ், செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, அர்ச்சகர்கள் அருணாச்சல சிவாச்சாரியார், மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !