உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் நாகம்மன் கோவிலில் செடல் பெருவிழா

கடலுார் நாகம்மன் கோவிலில் செடல் பெருவிழா

கடலுார்: கடலுார் நாகம்மன் கோவில் செடல் பெருவிழா இன்று நடக்கிறது. கடலுார் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள நாகம்மன் கோவில் செடல் பெருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் தீபாராதனை, இரவு அம்மன் வீதியுலா, இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு நடந்து வருகிறது. 9ம் நாள் உற்சவமான இன்று (18ம் தேதி) செடல் பெருவிழா நடக்கிறது.  அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்துவர். நாளை 19ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம், 25ம் தேதி உதிரவாய் நிகழ்ச்சி நடக்கிறது.  விழா காலங்களில் நாகம்மன் சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !