சுந்தர வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2970 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பாப்பனப்பட்டு சுந்தர வரதராஜபெருமாள் கோவிலில், கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தர வரதராஜபெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண வைபம் நடந்தது. பூஜைகளை சித்தலம் பட்டு கூரம் ஸ்வாமிகள் செய்தார். முன்னதாக கிருஷ்ணஜெயந்தி உறியடி திருவிழா நடந்தது.