உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜர் கோவிலில் திருவாதிரை திருமஞ்சனம்

ராமானுஜர் கோவிலில் திருவாதிரை திருமஞ்சனம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஸ்ரீமத் ராமானுஜர் கோவிலில், திருவாதிரை திருமஞ்சனம் நடந்தது. காஞ்சிபுரம், செவிலிமேட்டிலிருந்து, ஓரிக்கை செல்லும் சாலையில், ஸ்ரீமத் ராமானுஜர் சாலை கிணறு கோவில் உள்ளது. இங்கு, ராமானுஜருக்குக்கென, தனி கோவில் உள்ளது. பல சிறப்புகளைப் பெற்ற இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானுஜருக்கு திருமஞ்சனம் நடைபெறும். அந்த வகையில், நேற்று காலை, 10:00 மணிக்கு திருவாதிரை திருமஞ்சனம் நடந்தது. ராமானுஜர், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !