மணமை சிவலோகநாதர் கோவிலில் பாம்பு தோல் காணப்பட்டதால் பரபரப்பு
ADDED :2972 days ago
மணமை: மணமையில்,வழிபாடு முடங்கியுள்ள சிவலோகநாதர் கோவிலில், நாகத்தின் தோல் காணப்பட்டதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாமல்லபுரம் அடுத்த, மணமையில், கமலாம்பிகை உடனுறை சிவலோகநாதர் கோவில் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரே சிவன் கோவிலான இந்த கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாமல்லபுரம் ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை, கோவிலை நிர்வகிக்கிறது. எனினும், கோவில் பராமரிக்கப்படாமல் சீரழிந்துள்ளது. கோவில் வளாகத்தில் அவ்வப்போது காணப்பட்டநாகம், சமீபத்தில் தோல் உரித்துள்ளது. அந்த தோல், சிவன் சிலை அருகே கிடந்தது. சிவனை வழிபட்டு வரும் அந்த பாம்பு, முதுமையடைந்து தோல் உரித்திருக்க வாய்ப்பு உள்ளதாக பக்தர்கள் கருதுகின்றனர்.