உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகர் கோவிலில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி

மயிலம் முருகர் கோவிலில் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி

மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் சமய சொற்பொழிவு நடந்தது, மயிலம் சிவஞானபாலய சுவாமிகள் ஆதின திருமடத்தில் ‘பால சித்தரும், வீரசைவமும்’ என்ற தலைப்பில் சமய சொற்பொழிவு நடந்தது. மயிலம் முருகர் கோவில் வளாகத்தில் நடந்த துவக்க விழாவிற்கு, மயிலம் 20ம் பட்ட ஆதீனம் சிவஞான பாலய சுவாமி தலைமை தாங்கி, ஆசியுரை வழங்கினார். மயிலம் பள்ளி செய லர் விஸ்வநாதன் வரவேற்றார். கல்லுாரி துணை முதல்வர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.மயிலம் தமிழ்க் கல்லுாரி  முன்னாள் முதல்வர் திருநாவுக்கரசு  ‘சமயமும், சமுதாயமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். மயிலம் கல்லுாரி முதல் வர் விஜயகாந்தி, விழுப்புரம் சங்க இலக்கிய பொதும்பர் தலைவர் தமிழரசு, செயலாளர் விக்ரமன், காரைக்குடி கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமி,  திண்டிவனம் தமிழ் சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் சைவ பெருமன்ற சான்றோர்கள்,   தமிழ் துறை உதவி பேராசிரியர்கள்  சிவசுப்பரமணியன், குமார், சதீஷ், காஞ்சனா, வள்ளி, அமரதீபா, முத்துலட்சுமி, உமாமகேஷ்வரி மற்றும் விழுப்புரம் வீரசைவ மன்ற நிர்வாகிகள், மாணவர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !