இன்று சனி பிரதோஷம்: அகத்தீஸ்வரர் கோவிலில் வழிபாடு
ADDED :3027 days ago
கும்மிடிப்பூண்டி : பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில், இன்று மாலை, சனி பிரதோஷ விழா நடைபெற உள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டியில், ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பிரதோஷ மகிமை வாய்ந்த சிவத்தலங்களுள் பஞ்செட்டியும் ஒன்றாகும். சனி பிரதோஷத்தை முன்னிட்டு, பஞ்செட்டி கோவிலில், இன்று மாலை நடைபெறும் பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க இருப்பதால், விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்படுகின்றன. அதேபோன்று, கவரைப்பேட்டை, அரியதுரை வரமூர்த்தீஸ்வரர், புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரர், ஆகிய கோவில்களிலும் சனி பிரதோஷம் நடக்கிறது.