மாமர விநாயகர் கோவிலில் 25ல் சதுர்த்தி விழா
ADDED :2974 days ago
கூடுவாஞ்சேரி : ஸ்ரீமாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவிலில், 25ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. கூடுவாஞ்சேரி என்.ஜி.ஓ., காலனியில், மாமர சுயம்பு சித்தி விநாயகர் மற்றும் லலிதாம்பிகா சமேத மாமரத்து ஈஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு, ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு, வரும், 25ல், விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் சீனிவாசன் செய்துஉள்ளார்.