உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை
ADDED :3075 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், நடராஜப்பெருமான் கோவிலில், உலக நன்மைக்காக, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. காஞ்சிபுரம், நாகலுாத்து தெருவில், சிவகாமி சமேத அழகிய நடராஜப்பெருமான் கோவில் உள்ளது. இக்கோவிலில், தும்பவனம் மாரியம்மன், ஆடித்திருவிழா, கடந்த, 11 முதல், 13 வரை கோலாகலமாக நடந்தது. ஆடி பிறந்து, ஐந்தாவது வெள்ளிக்கிழமை, உலக அமைதி, நன்மைக்காக ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம். நடப்பாண்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவையொட்டி, சிவகாமி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.