உப்பூர் வெயிலுகந்த விநாயகர் வீதி உலா
ADDED :3337 days ago
ஆர்.எஸ்.மங்கலம்;ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக.16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் விநாயகர் தினமும், வெள்ளி மூசிகம், கேடகம், சிம்ம, மயில், யானை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் தொடர்ச்சியாக நேற்று காலை வெயிலுகந்த விநாயகர் முக்கிய வீதிகள் வழியாக மூலவர் ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகளில் பெண்கள் கோலமிட்டு விநாயகரை வரவேற்றதுடன், சிறப்பு அபிேஷக ஆதாரனைகள் செய்து வழிபாடு செய்தனர்.